Brand new buses in Nagercoil Region

சமீபத்தில் [18.6.2015] முதல்வர் 345 புதிய பேருந்துகளைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு [எட்டு மாதங்களுக்குப் பின் பல கோடி ரூபாய் நட்டத்திற்குப் பின்] அர்ப்பணித்தார். அவற்றில் 17 பேருந்துகள் திருநெல்வேலி கோட்டத்திற்கு வழங்கப்பட்டது. இம்முறை என்னமோ பெருந்தாராளமாக திருநெல்வேலி மேலாண் இயக்குநர் 10 வண்டிகளை நாகர்கோவில் மண்டலத்திற்கு அள்ளி வழங்கிவிட்டார். இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நாகர்கோவில் மண்டலத்திற்கும் திருநெல்வேலிக்குமுள்ள இடைவெளி 200 வண்டிகள். அந்த அளவிற்கு கொடைத்தன்மை திருநெல்வேலிக்கு.

இதில் கன்னியாகுமரி கிளைக்கு சில வண்டிகள் வரப்பெற்றுள்ளன. திருநெல்வேலியில் கூண்டுகட்டப்பட்ட TN 72 N 1920 கன்னியாகுமரி-பழநிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூண்டு கட்டப்பட்ட விதமும் பெயிண்டிங்கும் மிகவும் அழகாக பழபழப்பாகவும் இருக்கின்றது. ஆனால் நாகர்கோவில் , ராணித்தோட்டத்தில் கூண்டுகட்டப்பட்டுள்ள வண்டிகளைப் பார்க்கும்போது காறித்துப்பிவிடலாம் போலிருக்கிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒரே டிசைனில்தான் கூண்டு கட்டி வருகின்றனர் இங்குள்ள சோம்பேறிகள். பெயிண்டிங் பற்றி கேட்கவேண்டாம். கேவலத்திலும் கேவலம். பழபழப்பைப் பார்க்கவே முடியாது. முன் பக்க கிரில் டிசைன் இவர்களைப் போல் வேறு எந்த போக்குவரத்துக் கழகமும் (இவ்வளவு கேவலமாக)செய்யாது.

பதிவெண்களிலிருந்து பக்கவாட்டுப் பகுதியிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பெயர் முதல் வழித்தட விவரங்கள் வரை அனைத்தும் காகிதத்தில் அச்சிட்டு சாதாரண பசையைக் கொண்டு ஒட்டப்பட்டுள்ளது. இவற்றை இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அனுமதிக்கின்றார்.

TN 72 N 1920 Kanyakumai branch towards Pazhani.TN 72 N 1920 - 22.6.2015 VADASERY-Re

TN 74 N 1726 திருநெல்வேலியில் கட்டப்பட்டிருந்தாலும் நாகர்கோவிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட கிரில். இது நாகர்கோவில்-திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படுகிறது.

TN 74 N 1726 - 22.6.2015 VADASERY (1)-Re TN 74 N 1726 - 22.6.2015 VADASERY (2)-Re

ராணித்தோட்டத்தில் கூண்டுகட்டப்பட்ட அழகு ரதம். பல்லைக்காட்டிக்கொண்டு வருவதைக்காணலாம்.  TN 74 N 1733 இது டாட்டா வகையைச் சார்ந்தது. நல்லகாலம் இம்முறை ராணித்தோட்டத்திலிருந்தே திருநெல்வேலி-நாகர்கோவில் எண்ட் டூ எண்ட் ஆக இயக்கப்படுகிறது.

TN 74 N 1733 - 22.6.2015 VADASERY (1)-Re TN 74 N 1733 - 22.6.2015 VADASERY (2)-Re

TN 72 N 1734 ராணித்தோட்டம் கிளையைச் சார்ந்தது. இதுவும் ராணித்தோட்டத்தில் கூண்டுகட்ட அழகு ரதமே. இதுவும் டாட்டா வகையைச் சார்ந்தது.திருநெல்வேலி-நாகர்கோவில் எண்ட் டூ எண்ட் ஆக இயக்கப்படுகிறது.

TN 74 N 1734 - 22.6.2015 VADASERY (1)-Re TN 74 N 1734 - 22.6.2015 VADASERY (2)-Re

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s