TN 33 N 1569 – ஒரு சகாப்தம்

ஒரு வரலாறு நிறைவுற்றது

TN 33 N 1569 – 2002 ஆம் ஆண்டில் ஈரோடு மண்டலத்தில் கூண்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரப்பெற்ற புறநகர் பேருந்து. கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் ஈரோடு மண்டலத்திலிருந்து சில பேருந்துகள் கோவை மண்டலத்திற்கு தாரை வார்க்கப்பட்டன. அந்த வகையில் இப்பேருந்து கோயமுத்தூர் மண்டலத்திற்கு வந்து சேர்ந்தது.

பின்னர், நகரப் பேருந்தாக மாற்றப்பட்டு பேரூர்-பாலிடெக்னிக் தடம் எண் -2 சுங்கம்-1 கிளையிலிருந்து இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு தாழ்தளப் பேருந்துகள் வருகையால் இந்தப் பேருந்து அப்போது பல்லடம் கிளை கோவை மண்டலத்துடன் இணைக்கப்பட்டிருந்ததால் பல்லடம் பணிமனைக்கு மாற்றப்பட்டது. TN 38 N 0424 என்னும் பதிவெண்ணில் தடம் எண் P14/P27 பேருந்து கழிக்கப்பட்டு TN 33 N 1569 இப்பேருந்து அந்தத் தடத்தில் இயக்கப்பட்டது.

அன்றிலிருந்து கடந்த 5 வருடங்களாக ஒரே தடத்தில் நல்ல முறையில் இயங்கி வந்தது. எனினும், 12 வருடங்களைக் கடந்து விட்டதால் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. எனினும் முறையாக சரியான வழித்தடத்தில் இயங்கி வந்தது.

இதனுடன் கோவை மண்டலத்திலும், ஈரோடு மண்டலத்திலும் இருந்த பேருந்துகள் கழிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகி விட்டன.

ஆனால், கடந்த 17-05-2015 முதல் தனது வாழ்நாளை 13 வருடங்களில் முடித்துக்கொண்டு தற்போது நம்மிடம் இருந்து விடைபெற்று நிரந்தர ஓய்வெடுக்கச் சென்று விட்டது. இனி இப்பேருந்து திரும்பி வரப்போவதில்லை. எனினும், கம்பீரமான காட்சிகளைப் பல்வேறு கால கட்டங்களில் எமது குழு படம் பிடித்து வைத்துள்ளோம். அவை உங்களின் பார்வைக்கு….

அன்றைய சிவப்பு+வெள்ளை கலரில்
TN 33 N 1569

அழுக்குக் கலருக்கு மாற்றப்பட்ட பின்னர்
TN 33 N 1569 Palladam

TN 33 N 1569 Rear

முன்முகப்பு சற்றே மாற்றம் பெற்ற பின்னர்
TN 33 N 1569 Palladam Depot

TN 33 N 1569 15-02-2014

இறுதியாகக் கடந்த 30-05-2015 பல்லடம் பேருந்து நிலையத்தில் வலம் வரும் வேளையில்…
TN 33 N 1569 F 30-05-2015

TN 33 N 1569 FR 30-05-2015

TN 33 N 1569 30-05-2015

TN 33 N 1569 Rear 30-05-2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s