நிறைவடைந்த நான்கு வருடத் தேடல்…

முற்றுப்பெற்றது எமது நீண்ட நாள் தேடல்

கடந்த 2011 ஆம் ஆண்டில் தொடங்கிய கோவை மண்டல பதிவெண் கொண்ட பேருந்துகளைப் படம் எடுக்கும் படலம் நேற்றைய தினம் (29-08-2015) TN 38 N 1819 என்னும் பேருந்தினைப் படம் பிடித்த நொடிப்பொழுது முதல் முற்றுப் பெற்றது.

துவக்கத்தில் 967 பேருந்துகள் தேவைப்பட்ட நிலையில் தேடலின் பயனாக குறுகிய கால கட்டத்தில் தேடலில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை விரல் விட்டு என்னும் வகையில் அடங்கியது. எஞ்சிய பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டிருந்ததால் அவற்றைப் படமெடுத்து தேடலை முற்றுப் பெற வைக்க இயலவில்லை. சமீப காலமாக ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டதால் மீண்டும் வேகமெடுத்தது எமது தேடல் படலம்.

இறுதியில் TN 38 N 1819 என்னும் ஒரே ஒரு பேருந்து மட்டும் கண்களில் அகப்படாமல் மறைந்து வந்தது. நேற்றைய தினம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வைத்து இதன் உடன்பிறப்பு TN 38 N 1820 உடுமலை கிளையிலிருந்து பொள்ளாச்சிக்கு தடம் எண் 51-ல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு.. ஏன் TN 38 N 1819 உடுமலையில் இருக்கக்கூடாது என்று தோன்ற சற்றும் தாமதிக்காமல் அடுத்த பேருந்தில் உடுமலை பயணம்…

உடுமலை பேருந்து நிலையத்தில் ஏறத்தாழ ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் அதிர்ஷ்டம் தேடி வந்ததைப் போல நான்கு வருடங்களாக அகப்படாமல் இருந்த TN 38 N 1819 பேருந்தை லாவகமாக வலைத்துப் பிடித்த அந்த நொடி நான்கு வருடத் தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தநா 38 நா 1819 உடுமலை கிளையிலிருந்து உடுமலை-மானுப்பட்டி தடத்தில் இயங்கி வருகிறது
TN 38 N 1819 Udumalai Depot

TN 38 N 1819 Udumalai Depot Rear

Advertisements

6 comments on “நிறைவடைந்த நான்கு வருடத் தேடல்…

  1. Really i appreciate for your hard search of this bus.And in my guess only we are the guys who have completely closed our wanted list of the buses.At this second I thank you for your hard support.

  2. ரமேஷ்,,,,, கஜினிமுகம்மது பதினேழு முறை படையெடுத்து வெற்றி பெற்றது போல தாங்களும் தங்களது விடா முயற்சியினால் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் நீங்கள் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் அவ்வினாடியில் ஏதேனும் குறுக்கீடுகள் வந்திருக்கலாம். எவ்வித இடையூறுமின்றி எல்லாம் ஒரு சேர கை கொடுத்திருக்கிறது. வாழ்த்துக்கள். எமது மண்டலத்தில் தான் இன்னும் எத்தனையோ பேருந்துகள் அகப்படாமல் இருக்கிறது. அவை விழுப்புறத்திலோ, மதுரையிலோ, திண்டுக்கல்லிலோ, நாகப்பட்டினத்திலோ. தஞ்சையிலோ இருக்கலாம். அவை கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

  3. congratulations! hard work it will give success! you took hard work for TN38 N1819 and you had caught TN38 N1819 successfully! It is “Gods Gift” for you and Brindhaavanam team!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s