தசாப்தத்தில் சகாப்தம் த.நா-72 நா-1766

ஆம்….. மூன்று தசாப்தங்களில் ஒரு சகாப்தமாக கன்னியாகுமரி கிளையைச் சேர்ந்த த.நா-72 நா-1766 பேருந்து மறு வடிவம் பெற்று சாலைகளில் பயணிக்கிறது. அதிசயம்… ஆனால் உண்மை. இப்பேருந்து சமீபத்தில் அஞ்சுகிராமம் அருகே தீப்பற்றி முழுமையாக எரிந்துவிட்டது. விசாரணையில் மின் கோளாறினால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. பொதுவாக கடந்த காலங்களில் இது போன்று தீ விபத்தில் பாதிக்கப்படும் பேருந்துகள் அதன் பின் மறு சீரமைக்கப்படுவதில்லை. அப்படி பல கட்சிக் கலவரங்களில் எத்தனையோ புதிய பேருந்துகள் கூட கடந்த காலங்களில் தீ வைக்கப்பட்டதுண்டு. அப்பேருந்துகள் மறு வடிவம் பெறாமலேயே கழிக்கப்பட்ட வரலாறுகள் இம்மாவட்டத்தில் உண்டு.

அண்டை மாநிலத்தில் கேரள அரசுப் பேருந்து கூட புதிய பேருந்தாக இருந்த பின்னரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பின் கழிக்கப்பட்டது சமீபத்தில் நாம் கண்ணுற்ற சேதி.

ஆனால் அவ்வரலாறுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி ஒரு சாதனையை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது நாகர்கோவில் மண்டலம். ஆம். பேருந்து விசிறிகள் கணிப்பையெல்லாம் தாண்டி நாகர்கோவில், மத்திய பணிமனையில் மேற்சொன்ன பேருந்திற்கு  மறு வடிவம் அளிப்பதென அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு நீண்ட நாள் இராணித்தோட்டம் பணிமனையில் கூண்டு கட்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு ஒருவாறாக இங்கேயே புறநகர் பேருந்தாக இருந்தது தற்போது நகரப் பேருந்தாக கூண்டு கட்டப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஓடத்துவங்கியது. அதனை இன்றுதான் படம் பிடிக்க முடிந்தது.

ஒரு வரலாற்றைப் புரட்டிப் போட்ட நாகர்கோவில் மண்டலத்தினைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அன்று த.நா-72 நா-1766  23.01.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்

புகைப்படம்: ”காமிரா சக்கரவர்த்தி” நண்பர் ரெனோ ரூபட்ஸ்TN 72 N 1766 23.1.2013

TN 74 N 1766- 9.11.2015 -- (2)-RE TN 74 N 1766- 9.11.2015 -- (4)-RE

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s